All over again.
கடையேழு வள்ளல்கள் கொங்கு நாட்டினரே என்று நானும் முத்துவும் பேசிக்கொண்டிருந்தோம். எனக்கு முல்லைக்குத் தேரீந்த பாரி தான் ஞாபகம் வந்தது. பாரி கொங்குநாடா? பாரி கடையேழு வள்ளல்களில் இல்லையென்று முத்து சொன்னான். அதியமான் முதலியோரே அந்த வள்ளல்களென்றும். அதியமான் தகடூரை ஆண்டவன் - இது தரும்புரி பக்கம் வருவதென்றாலும் கொங்கு மண்டலத்தையே சாரும் என்று பேசிக்கொண்டிருந்தோம். அதியமான், தொண்டைமான் சண்டை, அதியமானின் படைக்கலங்கள் குறித்த கதையைப் படித்திருக்கிறேன். ஆனால் அவன் ஏன் வள்ளல் என்று மறந்துவிட்டது. முத்து உடனே அதியமான் ஔவைக்கு அரிய நெல்லிக்கனியைக் கொடுத்த கதையை நினைவூட்டினான். இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த சஞ்சீவன் கடைசியாகச் சொன்னான்: "இவ்வளவு ஏன்? ஔவையாராக நடிச்ச கேபி சுந்தராம்பாள் கூடக் கொங்கு நாடுதான் - அவங்க ஊர் தாராபுரம் பக்கத்துல இருக்கிற கொடுமுடி!" அப்புறம் என்ன பேச்சு வேண்டியிருக்கிறது? *** ஒருமுறை கோவை ராமநாதபுரத்தில் 'ரேசன்' வாங்க என்னையும் சஞ்சீவனையும் அனுப்பினார்கள். அந்த மாதம் யாருடைய 'ரேசன்' அட்டையையோ கடன்வாங்கியிருந்தாள் ப...
Comments